ரஷ்யாவின் ஜெட் விமானங்கள் கடந்த சில மாதங்களாகவே Okhotsk கடல் மற்றும் கருங்கடலில் பறக்கும் அமெரிக்க விமானங்கள் பலவற்றை இடைநிறுத்தி திருப்பி அனுப்பி வருகிறது. இந்நிலையில் Chukotsk கடலுக்கு மேல் ஒரு விமானம் ரஷ்ய எல்லையை நோக்கி வந்துகொண்டிருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் பசிபிக் கடற்படையினுடைய வான் பாதுகாப்பு படையில் இருந்து Mig-21 என்ற போர் விமானம் அந்த விமானத்தை அடையாளம் காண்பதற்காகவும், ரஷ்ய வான்வெளியின் எல்லை மீறாமல் தடுப்பதற்காகவும் புறப்பட்டுள்ளது. அதன்படி ரஷ்ய விமானக்குழுவினர் அந்த விமானம் அமெரிக்க விமானப்படையின் RC-135 உளவு விமானம் தான் என்று கண்டுபிடித்துவிட்டனர்.
அதன் பின்பு அதை நிறுத்தியதோடு ரஷ்ய எல்லையை விட்டு வெகுதூரம் துரத்தி அனுப்பிவிட்டு, ரஷ்ய விமானக்குழுவினர் பாதுகாப்பாக வந்திறங்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.