இளவரசர் பிலிப் கடந்த மாதம் தனது 99வது வயதில் அமைதியான முறையில் உயிரிழந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இந்த நிலையில் அவரது இறப்பு சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இளவரசர் பிலிப் வயது காரணமாகவே இறந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இளவரசரின் இறப்புக்கு வேறு அடையாளம் காணக்கூடிய நோய் அல்லது காயங்கள் இல்லை எனவும் அவர் இறப்புக்கு முன்னர் செய்யப்பட்ட இதய அறுவை சிகிச்சைக்கும் அவருடைய இறப்பிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இளவரசர் பிலிப் காலமான பின்னர் நான்கு நாட்கள் கழித்து அவருடைய இறப்பு முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடைய இறப்பு சான்றிதழ்களில் அவர் கடற்படை அதிகாரி எனவும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் இளவரசர் எனவும் குறிப்பிட்டிருந்தது.