நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மஹிந்த மற்றும் சஷிக்கு இடையில் 15 நிமிடங்கள் வரை உரையாடல் நீடித்ததாக தெரிய வருகிறது.
பத்தரமுல்லை, நெழும் மாவத்தையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு இரண்டு பிள்ளைகளுடன் வருகைத்தந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துமாறு மஹிந்த, சஷியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சஷி அதற்கு விரும்பாத நிலையில், கோபமடைந்த மஹிந்த> சஷி வீரவன்சவை கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார்.
நீங்கள் இவ்வளவு திடமாக எனது பணத்திலேயே வாழ்கின்றீர்கள் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சஷி வீரவன்ச, தாம் இந்த அளவிற்கு பாதிப்படைய ஷிரந்தியே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
விமலின் அரசியலை நிறுத்துவதற்கு நீங்கள் பின்னால் இருந்து கொண்டு செய்யும் சூழ்ச்சி குறித்து தான் மற்றும் விமல் அனைத்தையும் அறிந்துள்ளோம் என சஷி வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கோபமடைந்த மஹிந்த தொலைப்பேசியை நிலத்தில் அடித்துள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டது தொடர்பில் ஓர் அளவு மகிழ்ச்சியாக மஹிந்த ராஜபக்ச உள்ளார் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன்.
எனினும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள வீரவன்சவை இரு தடவைகள் சிறைக்கு சென்று மஹிந்த நலன் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.