உலகில் மூடநம்பிக்கைகளை நம்புபவர்கள் ஒருபுறம் இருந்தால், அதை தைரியமாக மீறி சாதித்து காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
அந்த வகையில் மேற்கத்திய நாடுகளில் 13ம் திகதி வெள்ளிக்கிழமை என்றாலே அபசகுணம், விபரீதம் நிகழும் என்பது நம்பிக்கை.
இதனை உடைத்தெறியும் வண்ணம் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அதாவது Copenhagen பகுதியிலிந்து Helsinki என்ற பகுதிக்கு AY666 என்ற விமானம் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த விமானம் 13 வருடங்கள் பழமையானது.
இது பிரித்தானிய நேரப்படி 12.15 மணிக்கு Copenhagen பகுதியிலிந்து Helsinki பகுதிக்கு கிளம்பியுள்ளது.
13 வருடங்கள் பழமையான விமானம் என்பதால் ஏதேனும் தொழில் நுட்ப கோளறுகள் ஏற்படுமோ, இதனால் விமானத்தில் பயணம் செய்யம் பயணிகளுக்கு எந்த வித பிரச்சனையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சம் இருந்தது. ஆனால் விமானம் எந்த ஒரு பிரச்சனையின்றி தரையிறங்கியது.
இது குறித்து பைலட் ஒருவர் கூறுகையில், விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாரும் சற்றும் பயப்படவில்லை, மிகுந்த மகிழ்ச்சியுடனே இந்த பயணத்தை அவர்கள் மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இது வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி 13 மணிக்கு 13 வருட பழமையான விமானம் பத்திரமாக தரையிரக்கப்பட்டுள்ளது என்ற சிறப்பம்சத்தையும் இந்த விமானம் பெற்றுள்ளது.