நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இன்று முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் தயாரிப்பாளராகவும் கலக்கி வந்த உதயநிதி ஸ்டாலின் அரசியல் களத்தில் இறங்கி முதல் முறையே மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ள நிலையில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தி வருகின்றனர்.
நடிகரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனா வெற்றிப் பெற்ற உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார்.
அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார் ஆரி.
மிகப்பெரிய வெற்றிப் பெற்ற உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தியது பெரிதும் மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழ்நாட்டில் சூரியன் இனி மிகவும் பிரகாசமாக ஒளிரட்டும் என நடிகர் ஆரி அர்ஜுனன் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.