இந்திய மீன் பிடி படகு ஒன்று, எல்லை மீறி இலங்கை கடல்பரப்பினுள் நுளைந்துள்ளது. இதனை அடுத்து விரைந்து சென்ற சிங்கள கடல் படையினர் அவர்களை மிரட்டி மீண்டும் இந்திய கடல் எல்லைக்கு செல்லுமாறு பணித்த வேளை. மீனவர்களில் ஒருவர் அணிந்து இருந்த டீ சேர்டில் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டு இருந்துள்ளது. அதன் கீழ் , TPK என்ற வாசகமும் எழுதப்பட்டு இருந்தது. இதனை அடுத்து TPK என்றால் என்ன என்று சிங்கள கடல் படை மீனவர்களை கேட்க்க , கடைசிவரை சிங்கள கடல்படை என்ன கேட்கிறது என்பதனை இந்திய மீனவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
இதனை அடுத்து குறித்த மீனவரை மட்டும் புகைப்படம் எடுத்து விட்டு, சிங்கள கடல்படை அவர்களை இந்தியா நோக்கிச் செல்லுமாறு கூறி விட்டார்கள். ஆனால் TPK என்றல் என்ன என்று சிங்கள புலனாய்வு துறை தற்போது கடுமையாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். யாருக்காவது தெரியுமா ?