Loading...
15 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவினை கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் பிறப்பித்துள்ளார்,.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது.
Loading...
அந்த வகையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கோவா அரசு நாளை முதல் 15 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. மாநில மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய தேவையில்லை என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை கட்டுப்படுத்தவே ஊரடங்கு பிறப்பித்துள்ளதாகவும் கூறிய அவர், கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்டசான்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
Loading...