தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. கட்சியில் பல்வேறு அங்கங்கள் வகித்த மு.க ஸ்டாலின் நேற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதனையடுத்து, தமிழகத்தில் முக்கிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட உத்தரவின்படி, சென்னை மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருக்கும் ஜெயந்த் முரளிக்கு பதில் பி.தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கோவை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.