எலுமிச்சை பழங்களை பொதுவாக எல்லோரும் ஜூஸ் செய்து அருந்தவே பயன்படுத்துவோம்.
ஆனால் அதனுடன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து உபயோகப்படுத்தினால் மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மருந்தாக அது பல விதத்தில் பயன்படுகிறது என்பது தெரியுமா?
ஒரு முழு எலுமிச்சையை ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து சாறாக ஆக்க வேண்டும்.
இப்போது மருந்து தயார்!
இந்த சாறை கடுமையான தலைவலி இருக்கும் சமயத்தில் அருந்தினால் அது குணமாகும்.
இந்த எலுமிச்சம் மற்றும் ஆலிவ் ஆயில் கலவையானது வயிறு சம்மந்தமான செரிமானம் மற்றும் மலசிக்கல் போன்ற கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் படைத்ததாகும்.
ஆலிவ் ஆயிலில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.
இந்த சாறை குடிக்கும் பட்சத்தில் மனிதர்களின் முக்கிய உடளுறுப்பான கல்லீரலில் நச்சுக்கள் சேராமல் பாதுகாக்கிறது.
முடக்கு வாதம் பிரச்சனை உடையவர்கள் இந்த சாறை அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.