Loading...
நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் தான் உப்பு.
” உப்பில்லா பண்டம் குப்பையிலே ” என்ற பழமொழி கூட உண்டு. உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் அந்த உப்பு மனிதர்களின் நோய்களை தீர்க்கும் பலவிதமான நன்மை கொண்ட கொண்ட ஒரு இயற்கை பொருளாக விளங்குகின்றது.
உப்பு அதிகமாகும்போது உணவின் சுவை கெடுவதும் உண்மைதான். ஆனால் அதிகப்படியான உப்பு உணவிற்கு மட்டுமல்ல நம் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.
Loading...
அந்தவகையில் உப்பை கூடுதலாக சேர்த்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
பக்க விளைவுகள்
- சில நேரங்களில் உப்பு நிறைந்த உணவை உட்கொண்ட பிறகு நீங்கள் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டதாக உணரலாம்.
- நாம் கூடுதல் உப்பு சாப்பிடும்போது, சிறுநீரகங்கள் கூடுதல் தண்ணீரைப் உறிஞ்சிக் கொண்டு, தண்ணீரைத் தக்கவைக்க வழிவகுக்கும். இது வீக்கம் ஏற்படலாம், குறிப்பாக கைகளிலும் கால்களிலும் உங்களுக்கு வீக்கம் ஏற்படலாம்.
- உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். உங்கள் உணவில் நீண்ட காலத்திற்கு அதிக உப்பு சேர்த்தால் அது உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
- இரத்த அளவின் அதிகரிப்பு இரத்த நாளங்களில் அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும், அதாவது உங்கள் இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம்.
உணவு வகைகள் மற்றும் சோடியத்தின் அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும்?
- உருளைக்கிழங்கு சிப்ஸ்களில் 100 கிராமுக்கு அதிகபட்சம் 500 மி.கி சோடியம் இருக்க வேண்டும்.
- அதே நேரத்தில் பை மற்றும் பேஸ்ட்ரிகளில் 120 மி.கி வரை சோடியம் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் 340 மி.கி வரை இருக்க வேண்டும் என்று ஆய்வுகளில் கூறப்படுகின்றது.
Loading...