சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்கள் வெடித்து சிதறுவதாக எழுந்த புகாரால், சாம்சங் மீது மக்கள் நம்பிக்கையில் பலத்த அடி விழுந்துள்ளது.
இதனை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸின் அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.
குறிப்பாக கேலக்ஸி எஸ்8 போனில் டூயல் கமெரா இருக்காது என்றும், எஸ்8 ப்ளஸ் கருவியின் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறும் என்வும் தெரியவந்துள்ளது.
மேலும் ஆப்பிள் ஐபோன்களை போன்றே இவைகளில் ஹோம் பட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரை அளவுகள் முறையே 5.7 அங்குலம் மற்றும் 6.2 அங்குலம் இருக்கும் என்றும், கேலக்ஸி எஸ்8 கருவி நிறுவனத்தின் சொந்த ஏஐ (AI) மென்பொருள் பிக்ஸ்பை (Bixby) கொண்டு வெளிவரலாம் எனவும் பேசப்படுகிறது.
6 GB RAM, Snapdragon 835 Processor மற்றும் கைரேகை சென்சார்கள் இடம்பெற்றிருக்கும் என நம்பப்படுகிறது.