2018 ஆம் ஆண்டில் Mi பேட் 4 தொடரை அறிமுகப்படுத்திய பின்னர், சியோமி எந்த டேப்லெட் சாதனங்களையும் இதுநாள் வரை அறிமுகப்படுத்தவில்லை. இப்போது, பிராண்ட் மீண்டும் டேப்லெட்கள் பிரிவில் நுழைந்து மற்ற பிரபலமான பிராண்டுகளுடன் போட்டியிட தயாராக உள்ளதாக தெரிகிறது. சியோமி புதிதாக மூன்று பிரீமியம் டேப்லெட்டுகளை அறிமுகம் செய்ய பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது, அவை Mi பேட் 5 வரிசையின் கீழ் அறிமுகப்படுத்தப்படும். இந்த வரிசையில் Mi பேட் 5 மற்றும் Mi பேட் 5 ப்ரோ ஆகிய சாதனங்கள் இருக்கும், மற்ற மாடலின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.
வரவிருக்கும் டேப்லெட்டுகளின் வெளியீட்டு காலக்கெடு, வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் போன்ற விவரங்களும் வெளியாகியுள்ளது. பேட் 5 இந்த மாதத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதியாகியுள்ளது. சீனாவில் அறிமுகம் செய்த பிறகு நிறுவனம் மற்ற பிராந்தியங்களிலும் டேப்லெட் சாதனங்களை அறிமுகப்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Mi பேட் 5 வடிவமைப்பு
XiaomiPlanet மூலம் வெளியான தகவல் கசிவுகள், வரவிருக்கும் டேப்லெட்டுகளின் வடிவமைப்பு மற்றும் வண்ண விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளன. இந்த டேப்லெட் வெள்ளை மற்றும் பிற வண்ணங்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், Mi பேட் 5 பின்புறத்தில் ஒரு சதுர கேமரா தொகுதிக்குள் இரட்டை கேமராக்களைக் கொண்டிருக்கும் என்பதையும் இதுவரை வெளியான ரெண்டர்கள் காட்டுகின்றன. பின்புற பேனலில் சியோமி பிராண்டிங் இருக்கும்.
Mi பேட் 5 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
நிலையான Mi பேட் 5 இல் 120 Hz புதுப்பிப்பு வீதத்துடன் 10.95 இன்ச் LCD டிஸ்ப்ளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் புரோ மாடல் 144 Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவு இருக்கும் என்று கூறப்படுகிறது. இரண்டு டேப்லெட்களும் 2K திரை தெளிவுத்திறன் மற்றும் 16:10 திரை விகிதத்துடன் வர வாய்ப்புள்ளது. நிலையான மாடல் ஸ்னாப்டிராகன் 870 SoC உடன் இயங்கும், அதே நேரத்தில் புரோ மாடலில் மீடியா டெக் டைமன்சிட்டி SoC இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
மேலும், டேப்லெட்டுகள் கையடக்க PC பயன்முறை ஆதரவுடனும் வரும் என்றும், நிலையான மாடலின் இரட்டை கேமராக்களில் 20 MP முதன்மை சென்சார் மற்றும் 13 MP செகண்டரி லென்ஸ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் இந்த சாதனத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 8,720 mAh இரட்டை செல் பேட்டரி மற்றும் அலுமினிய அலாய் உடல் ஆகியவை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விலையைப் பொறுத்தவரை, சியோமி Mi பேட் 5 RMB 3,000 (சுமார் ரூ.34,200) விலைக்கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, புரோ மாடல் நிலையான மாதிரியை விட அதிகமாக விலைக்கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை வரம்பில், Mi பேட் 5 டேப்லெட்டுகள் சாம்சங்கின் கேலக்ஸி டேப் S7 தொடர் டேப்லெட்டுகளுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.