தவறான முடிவெடுத்து கணவன் உயிரிழந்ததை அறிந்த மனைவியும் அதே வழியில் தனது உயிரைத் துறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலக பட்டறையில் நேற்று மாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது-34), அவரது துணைவி ரஜிதா (வயது-33) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
குடும்பத்தலைவர் நேற்று மாலை நகை வேலைக்கு பயன்படுத்தும் இரசாயனத்தை உட்கொண்ட நிலையில் அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.
அதனை அறிந்த மனைவி அதே இராசயத்தை உட்கொண்டு அவருக் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்து வருகின்றார்.