எவ்வளவு வயதானாலும் என்றும் இளமையாக நம் அனைவரையும் அதிசயிக்க வைக்கும் அழகுக்கு சொந்தக்காரியாக இருந்து வருபவர் தான் நடிகை நதியா.
இளமையின் ரகசியம் பற்றி அவர் கூறுகையில், எனது அப்பா மற்றும் அம்மா இருவருமே அதிக வயதைத் தாண்டியும் இளமையோடு தான் இருந்தார்கள்.
அதனால் அதன் அடிப்படையில், இது எனக்கு ஜெனிடிக்கலாக கிடைத்த வரமாக எனக்கு அமைந்தது.
இருந்தாலும் நான் அந்த வரத்தைப் பராமரிக்க, என்னுடைய லைஃப் ஸ்டைலில் சில விஷயங்களை தவறாமல் என்றும் கடைபிடித்து வந்தேன்.
அது தான் எனது உடலுக்குத் தேவைப்படும் ஓய்வை தவறாமல் தினமும் எடுத்துக் கொள்வேன்.
தினமும் காலை 6.30 மணிக்கு எழுந்து, இரவு 11 மணிக்கு உறங்கி விடுவேன். ஷூட்டிங் இருக்கும் நேரங்களில், கிடைக்கும் நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொள்வேன்.
அன்றாடம் தினமும் நேரத்துக்குச் சாப்பிடுவது, விடுமுறை நாளாக இருந்தாலும் காலை 8 மணிக்கு காலை உணவை முடித்து விடுவேன்.
ஆனால் எனது உணவு பழக்க வழக்கத்தில், உணவுக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. எனக்கு பிடித்த உணவை அளவோடு என்றும் எடுத்துக் கொள்வேன்.
மேலும் நான் தினமும் நிறையத் தண்ணீர் குடிப்பேன். நான் ஒரு நான் வெஜிடேரியன். ஆனால் மீன் விரும்பிச் சாப்பிடுவேன். ஏனெனில் அது என் சரும பளபளப்புக்கு கைகொடுக்கிறது.
நான் உணவுக்கு நேரம் ஒதுக்குவதை போல தினமும் உடற்பயிற்சி செய்வதற்கும் நேரத்தை தவறாமல் ஒதுக்கி, தினமும் ஒன்றரை மணி நேரம் வரையிலும் தவறாமல் உடற்பயிற்சி செய்து விடுவேன்.
நான் புற அழகுக்கு எவ்வளவு பராமரிப்புகள் செய்கின்றனோ அதேபோல அக அழகை அதிகமாக நம்புவேன். எனவே எனது உள்ளத்தில் உற்சாகம் மனதை எப்போதும் பாஸிட்டிவ் ஆகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வேன்.
இரவு வெகு நேரமாக ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பினாலும் கூட, க்ளென்ஸர், தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் மூலம் எனது மேக்கப்பை முழுமையாக கலைத்து விட்டு தான் உறங்கச் செல்வேன்.
எனது அழகுப் பராமரிப்புக்கு ஏற்றது போலவே உடைகள் விஷயத்திலும் இருப்பேன். டிரெண்டுக்கு ஏற்ப ஆடைகள் தேர்வு செய்வதைவிட, எனக்குப் பொருத்தமான ஆடைகளே நான் அதிகம் விரும்புவேன்.
இதை விட நான் எனது உடலை மிகவும் நேசிக்கிறேன். எனவே எப்போதும் முதல் முக்கியத்துவத்தை எனது உடல் பராமரிப்பில் கொடுப்பதால், நான் என்றும் இளமையோடு உள்ளேன் என்று நடிகை நதியா கூறியுள்ளார்.