Loading...
பொதுவாக சிலருக்கு அதிக அளவில் வியர்க்கும். அதிலும் குறிப்பாக, உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு தான் இந்த பிரச்சனை இருக்கும்.
சிலர் இப்படி அதிகமாக வியர்ப்பதால், பலர் அந்த வியர்வையைக் கட்டுப்படுத்த நிறைய முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
Loading...
ஆனால் அப்படி அதிகமாக வியர்ப்பதால் உடல் எடை குறைவதுடன், மேலும் நிறைய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
அதிகமாக வியர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- நமது உடம்பில் இருந்து வியர்வை அதிகம் வெளியேறினால், நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்படும். இதனால் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.
- நாம் உடற்பயிற்சியி செய்யும் போது, வெளிவரும் வியர்வையானது நமது உடம்பின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கிறது.
- வியர்க்கும் போது சருமத் துளைகள் விரிவடைந்து, அதன் வழியே வியர்வை வெளியேறுவதால், சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது.
- நம் உடம்பில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறினால், மன அழுத்தம், சோர்வு போன்றவை நீங்கி, மனநிலையானது புத்துணர்ச்சி அடைந்து, எப்போதும் மனது சந்தோஷமாகவும், ரிலாக்ஸாகவும் வைக்க உதவுகிறது.
- அதிக வியர்வை வெளியேற்றத்தினால், நமது சிறுநீரகமானது சீராக செயல்பட்டு, சிறுநீரகத்தில் நச்சுக்கள் மற்றும் கற்கள் உருவாகுவதை தடுக்கிறது.
Loading...