ஹொட்டல் உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகும்.
இதனை குறைப்பதற்கு, நமது வீட்டிலேயே உள்ள பேரிச்சம் பழம் மற்றும் இஞ்சியை வைத்து தயாரிக்கலாம்.
இஞ்சி மற்றும் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மைக் கொண்டது.
தேவையான பொருட்கள்
பேரிச்சம் பழம் – 4
இஞ்சி சாறு- 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் 4 பேரிச்சம் பழத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 2 டீஸ்பூன் இஞ்சி சாறும் மற்றும் போதுமான அளவு தண்ணீரை கலந்து பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிடும் முறை
நாம் தயாரித்து வைத்துள்ள இந்த பேஸ்ட்டை தினமும் இரவில் உணவு சாப்பிட்ட பின் சாப்பிட வேண்டும். இதே போல 2 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் முழுமையாக கரைந்துவிடும்.
குறிப்பு
நாம் தயாரித்த இந்த இயற்கை மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதுடன், சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வர வேண்டும். மேலும் முக்கியமாக இந்த மருந்தை சாப்பிட்டு வரும்போது, உணவுகளில் எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.