திருப்பதி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் வார்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கொரோனா தொற்று நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் இயங்கி வரும் ரூயா அரசு மருத்துவமனை கொரோனா வைரஸ் வார்டில் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இந்நிலையில் மருத்துவ மனையில் இருந்த டேங்கரில் இருந்த ஆக்சிஜன் தீர்ந்து விட்டதால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அத்தோடு தகவல் அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் கொரோனா வைரஸ் வார்டுக்குள் நுழைந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் தங்கள் உறவினர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் 40 நிமிடத்திற்கு மேலாக ஆக்சிஜன் கிடைக்காத நிலையில், 11 பேர் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதால் அவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இச் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணா ஆக்சிஜன் சப்ளை செய்யப்படும் டேங்கர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமக்கு சென்னையில் இருந்து வரவேண்டிய ஆக்சிஜன் சிலிண்டர் சற்று காலதாமதமாக வந்ததாலும், அதே நேரத்தில் நம்மிடம் இருந்த சிலிண்டர் வைத்து நோயாளிகளுக்கு கொடுத்து வந்த ஆக்சிஜன் அழுத்தம் குறைவாக இருந்த காரணத்தாலும் 11 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.