இந்தியாவின் பெங்களூரில் கள்ளக்காதலனை இழந்த துக்கம் தாங்காமல் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் அமித், வக்கீலான இவருக்கும், ஸ்ருதி என்ற பெண்ணுக்கும் இடையே தகாத உறவு இருந்தது.
ஸ்ருதி ஏற்கனவே திருமணமானவர், கணவர் பெயர் ராஜேஷ்.
அமித்- ஸ்ருதி விவகாரம் ராஜேசுக்கு தெரியவரவே, மனைவி கண்டித்துள்ளார், கணவரின் பேச்சை கண்டுகொள்ளாமல் அமித்துடன் ஊர்சுற்றி வந்துள்ளார்.
இதனால் கடும் கோபத்தில் இருந்துள்ளார் ராஜேஷ், இந்நிலையில் சம்பவ தினத்தன்று ஸ்ருதியுடன் அமித்தை பார்த்துள்ளார் ராஜேஷ்.
ஆத்திரத்தில் துப்பாக்கியால் அமித்தை நோக்கி சுடவே, இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார், இவரை அழைத்துக் கொண்டு ஸ்ருதி மருத்துவமனையில் அனுமதித்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அமித் உயிரிழந்தார், இவர் இழந்த துக்கம் தாங்காமல் ஸ்ருதியும் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார், ராஜேஷை தேடி வருகின்றனர்.