அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக பாலியல் தொழில் செய்து வந்த இளம்பெண்ணை நியூயார்க் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
26 வயதான Geliesha Smith என்பவர் நியூயார்க்கில் உள்ள ஒரு நிறுவனத்தில் probation அதிகாரியாக பணி புரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் Geliesha Smith, alias Lisa Smith என்ற பெயரில் இணையத்தில் ஆபாச போஸ்டர்களுடன், மொபல் நம்பர் இணைத்து பாலியல் தொழிலுக்காக விளம்பரம் கொடுத்தை பொலிசார் கண்டுபிடித்தனர்.
மேலும், பகலில் அதிகாரியாக பணி புரியும் அவர், இரவில் பாலியல் தொழில் செய்வதும் பொலிசாருக்கு தெரிய வந்தது. நியூயார்க்கில் பாலியல் தேவைகளை பெறுவதும், விற்பதும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
இந்த நிலையில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார், அவரை கையும் களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர்.
இதன்படி வாடிக்கையாளர் போர்வையில் அவரை தொடர்பு கொண்ட பொலிசார் அவரை ஒரு ஹொட்டல் அறையில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.
இதற்கிடையில் Geliesha Smith அதிகாரியாக பணி நிறுவனம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.