தமிழர்களின் பண்டையகால வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும் என போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என வலியுறுத்தி திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார்.
ஆனால் அங்கிருந்த இளைஞர்கள் அனைவரும் ஆர்யா பீட்டா அமைப்பைச் சேர்ந்தவர், என எதிராக கோஷம் எழுப்பினார்.
அதற்கு ஆர்யா பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் எல்லாம் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் அல்ல என கூறியிருந்தார். இவரின் இக்கருத்துக்கு பிரபல கவிஞரான சினேகன் ஆர்யாவிடம் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், அவர் ஜல்லிக்கட்டிற்கும், பீட்டாவிற்கும் தொடர்பு இல்லை என்றால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நடக்கும் பிரச்சனைகளை அவர்களிடம் எடுத்து கூறாலாமே, ஏன் மறுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர்கள் உதவியால் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதனால் காளையை காட்சி பொருளிலிருந்து விலக்குங்கள் என கோரிக்கை வைக்கலாமே எனவும் கூறியுள்ளார்.
நீங்கள் தமிழ்நாட்டின் தண்ணீர், சாப்பாடு என அனைத்தையும் சாப்பிட்டிருக்கிறீர்களே என கூறினார்.
மேலும் தற்போது இவர்களைப் போன்ற நடிகர்கள் பீட்டா அமைப்பிடம் சில வருடங்களுக்கு விளம்பர மாடலாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் பீட்டா அமைப்பையும் எதிர்க்க முடியாமல், தமிழகத்திலும் ஒன்றும் செய்ய முடியாமல் முழிக்கின்றனர் என கூறியுள்ளார்.