Loading...
பசும்பாலை விட ஆட்டுப் பாலில் ஏராளமான சத்துக்கள் இருப்பதுடன் உடல் நலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
Loading...
ஆட்டுப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- பசும்பாலை விட ஆட்டுப் பாலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் குறைவாகவும், பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், வாய்வுத் தொல்லை பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
- பசும்பாலில் உள்ள கேசின் என்னும் புரதம் சில குழந்தைகளுக்கு அலர்ஜி, வாந்தி, வயிற்றுப்போக்கு, போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் ஆட்டுப் பாலில் கேசின் மிகமிகக் குறைவாக இருப்பதால், இந்த அலர்ஜித் தொல்லைகள் ஏற்படாது.
- பசும்பாலில் லாக்டோஸ் எனப்படும் பால் சுகர் அதிகமாக உள்ளது. இது மனித உடலில் உற்பத்தியாகும் லாக்டேஸ் என்னும் என்சைம்களை எளிதில் செரிமானம் செய்துவிடும். எனவே, லாக்டேஸ் என்சைம் குறைவாக இருக்கும் சிலருக்கு பசும்பாலை விட ஆட்டுப் பால் தான் சிறந்தது.
- ஆட்டுப் பாலில் விட்டமின்கள் மற்றும் ரிபோஃப்ளேவின், கால்சியம், புரதம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் மிகுதியாக உள்ளது. எனவே நாம் ஆட்டுப்பால் சாப்பிடுவதால், நமக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Loading...