உடலின் ஆரோக்கியம் முதலில் பற்களில் தான் தொடங்குகிறது, தினமும் இருவேளை பற்களை துலக்க வேண்டும்.
சாப்பிடும் முன், சாப்பிட்ட பின்னர் வாய்களை நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
முறையாக பராமரிக்காதபோது சொத்தைப் பற்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளினால் அவதிப்பட நேரிடும்.
குறிப்பாக சிறுவயது முதலே குழந்தைகள் பற்களின் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
ஜூஸ் வகைகள்
குழந்தைக்கு ஜூஸ் செய்து கொடுக்கும் போது, அதில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்த்து, தேன் சேர்த்து கொடுக்க வேண்டும். ஏனெனில் சர்க்கரை பற்களை சொத்தையாக்கி, ஈறுகளை சேதப்படுத்தும்.
வெள்ளை உணவுகள்
வெள்ளை உணவு வகைகளான சாதம், வெள்ளை பிரட், பாஸ்தா போன்றவை ஈறு நோய்களையும், சொத்தைப் பற்களையும் ஏற்படுத்தும். ஏனெனில் இந்த உணவுகளை சாப்பிடும் போது, அவை பற்களின் இடையில், சிக்கிக் கொண்டு, பல் சொத்தை மற்றும் ஈறு நோய்களை ஏற்படுத்துகிறது.
உலர் திராட்சை
உலர் திராட்சையானது, குழந்தைகளின் பற்களில் சிக்கி, சொத்தைப் பற்களை உண்டாக்கும். எனவே உலர் திராட்சையை அளவுக்கு அதிகமாக குழந்தைகளுக்குக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
சோடா
சோடாவில் உள்ள அமிலம், குழந்தைகளின் பற்களைப் பாதித்து, பற்களின் எனாமலை அரித்து, சொத்தைப் பற்கள் ஏற்படும் வாய்ப்பை ஏற்படுத்தி, குழந்தைகளின் உடல் பருமனை அதிகரிக்கச் செய்கிறது.
சாக்லேட்
சாக்லேட்டுகள் முழுமையாக சர்க்கரையை அதிகமாக கொண்டவை. எனவே சர்க்கரை நிறைந்த சாக்லேட்டுக்களை குழந்தைகளுக்கு அதிகம் சாப்பிடக் கொடுத்தால், வாயில் உள்ள பாக்டீரியா அந்த சர்க்கரையை உட்கொண்டு, பற்களை அரிக்க ஆரம்பித்து, சொத்தைப் பற்களை ஏற்படுத்துகிறது.