நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளுகாவெல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரதுங்கொட, கோவியாபன, கஹவண்ணகம, தொம்மங்கோட கிராம சேவகர் பிரிவுகளும், ஹம்பரதூவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லணு மோதர பொனவிஸ்டா கட்டுகுருந்த கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெனவக பாதகட, டிப்பிடிகல கிராம சேவகர் பிரிவுகளும், குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கமுவ கிராம சேவகர் பிரிவும், தெல்கமுவ பிரிவின் நகரப் பகுதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்கை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உக்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹியத்தகண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போடைஸ் தோட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவின் கோனகல பிரிவு மற்றும் போடைஸ் கிராம உத்தியோகத்தர் பிரிவின் 30 ஏக்கர் பிரிவு ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் 8,747 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.