Loading...
வாழ்க்கையில், எப்போதும் பணம் மற்றும் செல்வம் குறித்த கஷ்ட நிலைகள் வராமல் என்றும் செல்வம் நிலைத்து இருக்க வேண்டும் என்ற ஆசைகள் மட்டும் அனைவருக்கும் நிச்சயமாக இருக்கும்.
Loading...
எனவே லட்சுமி தேவி நமது வீட்டில் என்றும் நிலைத்து இருப்பதற்கு, அன்றாடம் நாம் மாலையில் செய்யும் ஒருசில செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நமது செல்வம் கொழிக்க மாலையில் செய்யக் கூடாத செயல்கள்
- அதிகாலையில் எழுந்து துளசி செடிக்கு நீர் ஊற்றி, நெய் விளக்கேற்றி தொழுது வந்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி, லட்சுமி தேவி குளிர்ச்சியடைந்து, செல்வத்தை ஈர்க்கச் செய்வாள். அதுவே சூரிய அஸ்தமனத்திற்கு பின் துளசியை தொழுவது அல்லது தொடுவதால், அந்த வீட்டில் துரதிர்ஷ்டம் வருவதோடு, வறுமையும் நீங்காமல் இருக்கும்.
- மாலை வேளையில் தம்பதிகள் உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், மாலை நேரத்தில் உடலுறவில் ஈடுபட்டால், அது நமது வீட்டில் துரதிர்ஷ்டத்தை ஈர்த்து, வறுமையை விலக விடாமல் தடுக்கிறது.
- நாம் அன்றாடம் உணவு சாப்பிட்ட பின் பாத்திரங்களை அப்போழுதே சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அதனால் சனி மற்றும் சந்திரனின் கெட்ட செல்வாக்கு பெறுவதை தவிர்த்து, லட்சுமி தேவி செல்வம் மற்றும் செழிப்புகள் நமக்கு கிடைக்கும்.
- மாலையில் சூரிய அஸ்தனத்தின் போது படிப்பது, லட்சுமி தேவியின் கோபத்தை தான் ஈர்க்கும். ஆகவே மாலையில் ஒரே இடத்தில் அமர்த்து படிப்பதை விட்டு, விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடுவது மிகவும் நல்லது.
- வீடு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பகுதியை அசுத்தமாக வைத்துக் கொண்டால், அது லட்சுமி தேவியை கோபப்படுத்துவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. எனவே வீட்டில் செல்வம் கொழிக்க வீட்டையும், சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Loading...