அண்மைகாலமாகவே, சமூக வலைதளங்கள் முழுவதிலும் குட்டிவடிவேலு, சோபி என்ற சிறுவர்களின் காதல் லீலை வீடியோக்கள் தான் அதிகளவில் வைரலாகி வருகின்றது.
எனினும் 18 வயதை பூர்த்தி செய்யாத இந்த வயதில் காதல் தேவையா? படிக்கும் வயதில், படிப்பை பற்றி யோசிக்காமல் காதலை பற்றி யோசிக்கிறார்களா? அதற்கு அவர்கள் வீட்டு பெற்றோர்களும், சம்மதம் தெரிவித்தது தான் சற்று அதிர்ச்சி.
அத்துடன், இவர்களை வைத்து பல மீம்ஸ்களும், ட்ரோல்களும், வெளிவந்திருந்த நிலையில், தற்போது முக்கியமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதைப் பார்த்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும், கடலூர் காவல் துறையினர், அந்த சிறுமையை மீட்டு கடலூர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இது சரியான முடிவா? அந்த சிறுமி இந்த வயதில் பெற்றோர்களிடம் இருந்து பிரிப்பது முறையா? என தெரியவில்லை. ஆனால், தவறு செய்தால் தண்டித்து, பொறுமையாக அந்த சிறுமிகளுக்கு சொல்ல வேண்டிய பெற்றவர்களே பிள்ளைகளின் விருப்பத்திற்கு விட்டதால் வந்த விளைவா?
இதை வெறும் நகைச்சுவைக்காகவோ? கேலிக்காகவோ கூறவில்லை.. உண்மையில், இதெல்லாம் இந்த வயதில் தேவையில்லாதது..
அப்படியே இருந்தாலும், அதை ஒரு சமூக வலை தளங்களில் பதிப்பிப்பது மிகவும் தவறானது. அது ஒரு ஆனை விட பெண்ணை அதிகமாக பாதிக்கும். இதைப்பார்த்தாவது மற்ற சிறுவர், சிறுமிகள் புரிந்துக் கொண்டு அவரவர் வயதுக்கேற்ப நடந்துக் கொள்ள முயலுங்கள்.
அதீத அறிவும், வலிமையுமே ஆபத்தை உருவாக்கும் போது, அதீத முதிர்ச்சி பேராபத்தை உருவாக்கும்.
தற்போதிருக்கும் சூழ்நிலையில், குழந்தைகளிடம், தொலைபேசியை கொடுத்து தான் ஆகவேண்டும்.ஆனால் அதை அவர்கள் எப்படி உபயோகிக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
இதேவேளை, இந்த நிகழ்வால் சில பல 90’ஸ் சந்தோசமாக பதிவுகள் மற்றும் மீம்களை போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.