அமெரிக்க நாட்டில் உள்ள Florida மாநிலத்தில் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை உள்ளது. அங்கு கடந்த 1998ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்தது.
அதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த ஒரு மணி நேரத்தில் அந்த குழந்தையை அங்கு வந்த மர்ம பெண் ஒருவர் கடத்தி சென்றுள்ளார்.
அந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையை பொலிசார் உதவியுடன் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
தற்போது 18 ஆண்டுகள் கழித்து பொலிசார் தொலைந்த குழந்தையை இளம் பெண்ணாக கண்டுபிடித்துள்ளனர்.
அவருக்கு Kamiyah Mobley என கடத்திய அந்த பெண் பெயரிட்டுள்ளார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், Gloria Williams (51) என்னும் பெண் தான் Kamiyah வை 18 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தி சென்றுள்ளார்.
DNA பரிசோதனைகள் மூலம் காணாமல் போன அந்த குழந்தை தான் இந்த பெண் என உறுதிபடுத்தியுள்ளோம்.
காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய மையம் உதவியுடன் தான் இவரை நாங்கள் தேடி கண்டுபிடித்துள்ளோம்.
Kamiyah வை கடத்திய பெண்ணான Gloria வை தற்போது கைது செய்துள்ளோம். அவர் செய்த இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளனர்.