இலங்கையில் தற்போது பிரித்தானிய வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் இது மிகவும் சிக்கல்கள் நிறைந்தது எனவும் அடுத்த சில நாட்களில் தொற்றுநோய்களின் தினசரி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுவரை ஏராளமான கொவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இலங்கையில் பரவியிருக்கும் வைரஸ் பிரித்தானிய வைரஸின் மாறுபாட்டைக் கொண்டுள்ளது.
பிரித்தானிய மாறுபாட்டு வைரஸின் பரவல் விரைவானது மற்றும் சிக்கல்கள் மிக்கது என்றும், இறப்புகள் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார். இங்கிலாந்து வைரஸ் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வந்த ஒருவரிடமிருந்து இலங்கைக்குள் நுழைந்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்திய வைரஸின் மாறுபாடும் ஒரு இந்திய நாட்டவர் மூலம் இலங்கையில் நுழைந்தது என்றும் “இந்த ஆபத்து தொடர்ந்தால், வெளிநாட்டு வருகையாளர்களின் தனிமைப்படுத்தல் தீவிரப்படுத்தப்பட வேண்டும்”, என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.