வாட்ஸ் அப் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்ததைப்போல், மே 15-க்குள் புதிய பிரைவசி பாலிசியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி வந்தது.
அதே சமயம் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் அக்கவுண்ட் நீக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ்அப் உங்கள் அக்கவுண்ட்டை நீக்காது.
ஆனால் சில அடிப்படை அம்சங்களை மட்டுப்படுத்தும் என தெரிவித்தது. அதில், புதிய தனியுரிமைக் கொள்கை சார்ந்த நினைவூட்டல்களுக்குப் பிறகும் கூட அதை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் சில அடிப்படை அம்சங்களை, அதாவது உள்வரும் அழைப்புகள் அல்லது நோட்டிபிக்கேஷன்ஸ் போன்றவைகளை பெற இயலாமல் போகலாம்.
அதன் பின்னர் வாட்ஸ்அப் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் மெசேஜ் மற்றும் அழைப்புகளை நிறுத்தும், பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து மெசேஜ்களை அழைப்புகளை செய்யும் திறனையும் வாட்ஸ்அப் பறிக்கும் என தெரிவிக்கிறது.
இந்த கொள்கையை ஒப்புக்கொண்டு செயல்படுபவர்களுக்கு வாட்ஸ் அப் தொடர்ந்து செயல்படும். இயலாதவர்களுக்கு இவை மேற்கண்ட பாதிப்புகள் தரும் என்பது உறுதி.
இதனால், பயனாளர்கள் என்னதான் அதிருப்தியை வெளிக்காட்டினாலும், வேறு வழியின்றி இதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அல்லது மாற்று வழியான சிக்னல் அல்லது டெலிகிராம் செயலிக்கு செல்வதே சிறந்தது.