ஊரடங்கு விதிகளை பொதுமக்கள் பலர் பின்பற்றாத நிலையில், அதனை கட்டுப்படுத்துவது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடிப்பதில்லை.
இந்த சூழலில் இன்று முதல் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஊரடங்கு விதிகளை பொதுமக்கள் பலர் பின்பற்றாத நிலையில், அதனை கட்டுப்படுத்துவது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் பங்கேற்றார். அப்போது, மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.