Loading...
2–வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) தொடரின் இறுதிப் போட்டி புதுடெல்லியில் உள்ள சிரி போர்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின.
இதில், பி.வி.சிந்து வழிநடத்திய சென்னை அணி 4-3 என்ற கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி பிரிமியர் பேட்மிண்டன் லீக் சாம்பியன் பட்டம் வென்றது.
Loading...
முன்னதாக, 2–வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) திருவிழா கடந்த ஜனவரி 1–ந்தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வந்தது.
இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி ஏசர்ஸ், லக்னோ அவாத் வாரியர்ஸ், மும்பை ராக்கெட்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 8 பேர் உள்பட மொத்தம் 60 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்து கொண்டனர்.
Loading...