புத்தம் புதிய டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.20 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. 2019 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக், 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நிகழவில்லை.
ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4 இறுதியாக இப்போது இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் V4 மாடல், ரூ.20 லட்சம் விலையிலும், மற்றும் V4S மாடல் ரூ.23 லட்சம் விலையிலும் (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது;
உயர்நிலை அம்சங்களின் அடிப்படையில் ஸ்டாண்டர்ட் பைக்கை விட ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4S ரூ.3 லட்சம் கூடுதல் விலைக்கொண்டுள்ளது.
DC காமிக்ஸில் அதிகம் விரும்பப்படும் ஜோக்கரின் தோற்றத்தை ஒத்திருக்கும் வகையில் ஸ்ட்ரீட்ஃபைட்டர் முன்பக்க அமைப்பைக் கொண்டுள்ளது.
ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4 பைக்கானது 1,104 சிசி V4 இன்ஜினைக் கொண்டுள்ளது, இது ஒரு பெரிய 208 HP மற்றும் 123 Nm திருப்புவிசையை வெளியிடும் திறன் கொண்டது. இந்த பைக் 201 கிலோ எடைக்கொண்டது.
ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4 பைக்கானது பனிகேல் V4 பைக்கில் இருப்பதை போன்று எரிபொருள் தொட்டி மற்றும் அதன் 5.0 அங்குல TFT இன்ஸ்ட்ருமென்ட் டிஸ்பிளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நகர்ப்புற அமைப்பில் மிகவும் வசதியான சவாரி நிலையை வழங்க ஒரு தட்டையான, உயர்-செட் ஹேண்டில்பார் உள்ளது.
ஸ்ட்ரீட்பைட்டர் பைக்கில் ஆறு-அச்சு IMU உள்ளது, ப்ரெம்போ ஸ்டைல்மா பிரேக்குகள் கொண்டுள்ளது. முன் பக்கத்தில் இரட்டை 330 மிமீ டிஸ்க் பிரேக்குகள், பின்புறத்தில், இரட்டை பாட் காலிப்பருடன் 240 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கிலும் கார்னரிங் ABS அம்சம் உள்ளது.
V4S பைக் ஸ்டாண்டர்ட் V4 ஐ விட அதிகம் விலையிலானது, ஏனெனில் இது Ohlins semi-active சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங் டம்பர் மற்றும் மார்செசினியின் ஃபோர்ஜ்டு அலுமினியம் சக்கரங்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. நிலையான V4 சிவப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும், ஆனால் கூடுதலாக ரூ.20,000 கொடுத்தால் V4S ‘டார்க் ஸ்டீல்த்’ பதிப்பும் கிடைக்கும்.
டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4 க்கான முன்பதிவுகள் இப்போது இந்தியாவின் அனைத்து டுகாட்டி விற்பனை நிலையங்களிலும் திறக்கப்பட்டுள்ளன, மேலும் பிராந்திய வாரியான ஊரடங்கு நீக்கப்பட்ட உடனேயே விநியோகங்கள் தொடங்கப்படும்.