பொதுவாக குழந்தைகள் பசியாயிருந்தால், உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, சோர்வடைந்தாலோ, அல்லது மகிழ்ச்சியில் கூட அழுவார்கள். ஏன் பக்கத்தில் வேறு ஏதேனும் குழந்தைகள் அழுதாலும் அழுவார்கள். அப்படி உங்கள் குழந்தை அழைத்த தொடங்கினால் என்ன செய்யலாம்??
**குழந்தை அழுதால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். விடாது தொடர்ந்து அழுதால் தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மற்றபடி வயிற்று வலியாலும், அசௌகரியமான சூழ் நிலையாலும் குழந்தை அழலாம். இதற்கு பயப்படத் தேவையில்லை.
**சில நேரங்களில் குழந்தைக்கு பசித்தால் அவர்கள் அழுவார்கள். எனவே உணவு வேளைகளில் அவர்கள் அழுதால் அவர்களுக்கு உணவளியுங்கள்.
**உங்கள் குழந்தை விரல் சூப்பினால் அந்த பழக்கத்தில்ருந்து விடுவிக்கச் செய்யுங்கள். அவை ஆரோக்கியம் மற்றும் பற்களுக்கு நல்லதல்ல. விரல் சூப்புவதை நிறுத்தும்போது அழுதால் அவர்களுக்கு மாற்றாக பால் பாட்டிலை தந்து பாருங்கள்.
**சில நேரங்களில் தனிமையில் இருப்பதாக உணர்ந்தாலும் குழந்தைகள் அழும். அப்படியானால் அவர்களை கட்டி அரவணைத்து அவர்கள் பாதுகாப்பை உணருமாறு செய்யுங்கள்.
**சில சமயங்களில் பொழுபோக்கில்லாதபோது அவர்கள் அழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அவர்களை மெல்ல தூக்கிக் கொண்டு வெளியில் சென்று ஒரு நடை நடந்து விட்டு வாருங்கள்.
**அழும் குழந்தையை சமாளித்து அவர்கள் கவனத்தை திருப்ப பொம்மைகளும் உதவும். அதனால் எப்போதும் பொம்மைகளை கைவசம் வைத்திருங்கள்.
**சில நேரங்களில் வானிலையும் அவர்கள் அழுவதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தை உள்ள அரை மிகுந்த சூடாகவோ அல்லது மிகுந்த குளிராகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
**மேற்கூறப்பட்ட எதுவும் பயன் தர வில்லையென்றால் உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். செரிமானக் கோளாறுகளும் குழந்தையை சிலநேரங்களில் அழவைக்கும். மருத்துவத்துக்கு பின்னர், அழுகையை தாமாகவே நிறுத்தி விடும்.