கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல பலரும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவசர தேவைக்கும் ரீசார்ஜ் செய்ய முடியாமல் ஜியோபோன் பயனர்கள் தவிக்க கூடாது என்பதற்காக மாதத்திற்கு 300 நிமிட அவுட்கோயிங் அழைப்பு வசதியை இலவசமாக வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
இந்த இலவச சேவையை பயனர்களுக்கு வழங்க ரிலையன்ஸ் பவுண்டேஷனுடன் இணைந்து செயல்படவிருப்பதாக தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்திர அடிப்படையில் 300 நிமிடங்கள் இலவசமாக கிடைக்கும், மேலும் இந்த சலுகை தொற்றுநோய் காலம் முழுவதும் நீடிக்கும்.
ஆனால் இந்த சலுகைக்கு ஒரு வரம்பு உள்ளது, ஏனெனில் பயனர்கள் ஒரு நாளுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். தினசரி 10 நிமிடங்களுக்கு மேல் ஒருவரால் அழைப்பு சேவையை முடியாது. இந்த சேவை ஜியோபோன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அனைத்து ஜியோ SIM பயனர்களுக்கும் ஆனது அல்ல என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
300 நிமிடங்களை இலவசமாக வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் தங்கள் கணக்கை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு அதே மதிப்பில் கூடுதல் ரீசார்ஜ் திட்டத்தை இலவசமாகப் பெறவும் ஜியோ அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் நம்பருக்கு ரூ.75 திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தால், முதல் திட்டம் காலாவதியானதும் அதே விலையில் இன்னொரு திட்டத்தையும் நீங்கள் பெறுவீர்கள். இந்த திட்டம் ஆட்-ஆன் திட்டமாக அல்லாமல் புதிய வேலிடிட்டி உடன் கிடைக்கும்.
இருப்பினும், கூடுதல் இலவச ரீசார்ஜ் சலுகை வருடாந்திர அல்லது ஜியோபோன் உடன் தொகுக்கப்பட்ட திட்டங்களுக்கு பொருந்தாது. மார்ச் மாதத்தில், ஜியோ தனது ஜியோபோன் பயனர்களுக்காக ஐந்து புதிய தரவுத் திட்டங்களை அறிவித்தது. ஜியோபோன் ஆல் இன் ஒன் திட்டங்கள் ரூ.22 முதல் தொடங்குகின்றன. நிறுவனம் இப்போது ஜியோஃபோனுக்கு ரூ.22, ரூ52, ரூ.72, ரூ.102 மற்றும் ரூ.152 ஆகிய விலைகளில் ஐந்து திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் வெவ்வேறு நன்மைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டியோடு கிடைக்கும். இந்த திட்டங்கள் Jio.com தளம் மற்றும் MyJio பயன்பாட்டில் கிடைக்கும்.