சத்தியமங்கலத்தில் முழு ஊரடங்கு மீறி வாகனங்களில் கூட்டம் கூட்டமாக செல்லும் பொது மக்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.
தமிழகமெங்கும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்றிலிருந்து காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமலும் கொரோனா வைரஸ் தாக்கத்தை உணராமலும் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் சாலையில் சென்று வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே தேவையில்லாமல் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் முழு ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்துக்காக 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.மேலும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கொரோனா வைரஸ் தாக்கத்தை எடுத்துரைத்து பொதுமக்கள் ஆகவே முன்வந்து முழு ஊரடங்கை மதித்தால் மட்டுமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் எனவும் தயவுசெய்து யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுரை கூறி அனுப்பினர்.