தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாளொன்றுக்கு சராசரி பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்து விட்டது கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அதேவேளையில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் சப்ளை மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் பற்றாக்குறை நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உயிர்பலி எண்ணிக்கை சரசரவென உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.