Loading...
உத்தேச சீன உடன்படிக்கை குறித்த ஆவணம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சீனாவுடன் இணைந்து அம்பாந்தோட்டை துறைமுக அபிவருத்தி மற்றும் முதலீட்டு திட்டம் தொடர்பிலான இரு தரப்பு உடன்படிக்கை குறித்த உத்தேச ஆவணம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றில் இந்த உத்தேச ஆவணத்தை சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Loading...
இதன் மூலம் உத்தேச திட்டம் தொடர்பில் நாடாளுமன்றிற்கும் நாட்டுக்கும் விளக்கம் அளிக்கப்பட முடியும் என அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் ஞாயிறு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விவாதமொன்றை நடாத்த எதிர்க்கட்சிகள் நேரத்தை ஒதுக்கிக் கேட்டால் அதனை வழங்கத் தயார் என அரசாங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்
Loading...