அதிகாலையிலேயே அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். உறவினர்களின் உதவி கிட்டும். அன்பு நண்பர்களின் சந்திப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோக அனுகூலம் உண்டு.
நந்தி வழிபாட்டால் நலம்காண வேண்டிய நாள். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். இடம், வாங்க, விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
அலைச்சல் கூடும் நாள். அவசரத்தைத் தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. தூரத்து உறவினர்களால் தொல்லை ஏற்படலாம். பயணம் பலன் தரும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனை பலன் தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். எதிரிகளின் பலம் குறையும். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். பிரார்த்தனைகள் பலிக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர் உதவி கிடைக்கும்.
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். சொத்துக்களால் லாபம் உண்டு. புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
நிதி நிலை உயரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு துணைபுரியும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் பல பணிகளை விட்டு விடும் சூழ்நிலை உருவாகும். சுபகாரியச் செலவு உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. சேமிப்பில் சிறிது கரையும்.
குடும்பச்சுமை கூடும் நாள். குழந்தைகள் நலனில் கூடுதல் அக்கறை தேவை. உத்தியோக முயற்சி தாமதப்படும். ஆற்றல் மிக்கவர்கள் அருகில் இருந்தும் சில காரியங்களில் தாமதம் ஏற்படும்.
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கோவில் வழிபாட்டால் குதூகலம் காண்பீர்கள். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை விலகும் நாள். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். தொலைதூரப் பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். புதிய வேலை வாய்ப்பு பற்றிச் சிந்திப்பீர்கள்.