யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு இதுவரை 200ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளதுடன் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக யாழ் சுகாதார அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
உயிர் கொல்லி நோயான டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியில் நடைமுறைப்படுத்தப்படுவதாலேயே இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக உடுவில் பிரதேசத்தில் மாத்திரம் 200மேற்பட்டோர் டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
முற்றாக அழிக்கப்படக்கூடிய இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த பிரதேசத்தில் மிகவும் மந்தமாகவே செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் , சங்கானை மற்றும் வேலணை பகுதி வைத்திய அதிகாரிகள் மிகவும் திறமையாக கட்டுப்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதால் குறித்த பிரதேசங்களில் டெங்கு தாக்கம் மிகக்குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பொறுப்புடன் கடைமையாற்றவேண்டியவர்கள் அதனை செய்யத்தவறுவதால் பல பொதுமக்கள் பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.