விஜய் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. குடும்ப கதையை கொண்ட இந்த சீரியல் எல்லோருக்கும் பிடித்ததாக உள்ளது.
இதில் கதிர் என்கிற வேடத்தில் நடித்து வருபவர் குமரன். இவருக்கும் முல்லை என்கிற கதாபாத்திரத்திற்கு வரும் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.
தற்போது குமரன் வீட்டில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாராம். அதாவது அவரது தந்தை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாராம்.
இந்த தகவலை குமரனே தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.அதைப் பார்த்த அனைவரும் உங்களது தந்தை விரைவில் குணமடைந்துவிடுவார் என்று கூறி வருகின்றனர்.
A post shared by Vijay television family (@vijay_television_family)