தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக நடிகை த்ரிஷா செயல்பட்டு வருவதாக கூறி பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்
அத்தோடு, சிவகங்கையில் நடிகை த்ரிஷாவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவரது கர்ஜனை படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக தன்னுடைய டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள த்ரிஷா, தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் ‘ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தை மரியாதை குறைவாக நடத்துவது தான் தமிழ் கலாச்சாரமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோன்ற செயலுக்காக தமிழன் என்ற வகையில் வெட்கப்பட வேண்டும். சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் செயல்களுக்காக தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை.
அத்துடன் தான் இறந்துவிட்டதாக சித்தரித்து, வெளியிட்டுள்ள செய்திக்கும் த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், சமூக வலைதளங்களை இலவசமாக பயன்படுத்துவது தான் இதுபோன்ற மோசமான செயலுக்கு காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.