தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தற்பொழுது உடல் நலக்குறைவடைந்துள்ளதாகவும் நோயை கட்டுப்படுத்தும் மருந்து மாத்திரைகள் பாவிப்பதாகவும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள இதயநோயினை முற்றும் முழுதாக குணப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் ஆதரவாலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்ட முன்னாள் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் கடந்த ஆண்டில் திடீர் மரணமடைந்தார்.
குறித்த மரணம் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்பாராத பேரிழப்பாக கருதப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எவருக்கும் இனியும் துயரச் சம்பவம் எதுவும் ஏற்படுவதற்கு அலட்சியப்போக்கு காரணமாக இருந்துவிடக் கூடாது என்று கட்சி ஆதரவாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கட்சி ஆதரவாளர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.