பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்கொள்ள கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களாக ஆவி பிடித்தால் கொரோனாவை தடுக்கும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
அதை உண்மை என நம்ப வைக்கும் வகையில் பாஜக கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவையில் கொரோனா நோய் தொற்றை தடுக்க நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகனத்தை துவக்கி வைத்தார்.
அதுமட்டுமின்றி சென்னையிலும் பொதுஇடங்களில் நீராவி பிடிக்கும் மையங்கள் திறக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்கள் மருத்துவரின் அறிவரை இல்லாமல் புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்கொள்ள கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொது மக்கள் தாங்களாகவே சுய வைத்தியம் என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் தவறாகும். அவ்வாறான சிகிச்சை முறைகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.புகை போடுதல் மூலம் அழுத்தமான காற்று அவர்களின் வாய் வழியே சென்று அவர்களின் நுரையீரலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது என மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
https://twitter.com/Priyan_reports/status/1394181636074348546