ஜேர்மனிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான போக்குவரத்தில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனிக்கும் இந்தியாவுக்கும் இடையில் நேரடி விமான போக்குவரத்துக்கு பதிலாக, ஜேர்மனியிலிருந்து இந்தியா செல்லும் விமானங்களானாலும், இந்தியாவிலிருந்து ஜேர்மனி செல்லும் விமானங்களானாலும், ஐக்கிய அரபு அமீரகம் வரை வந்து அங்கிருந்து பயணிகள் வேறு விமானத்தில் ஏற்றப்பட்டு பயணிப்பது இதுவரை வழக்கமாக இருந்துவந்தது.
ஆனால், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அமீரகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆகவே, இனி ஜேர்மனிக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிக்கும் விமானப்பயணிகள் அமீரகத்துக்கு பதிலாக, பஹ்ரைன் நாட்டுக்கு வந்து அங்கிருந்து விமானம் மாறிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Lufthansa நிறுவன விமான நிறுவனம் இந்த மாற்றம் குறித்து அறிவித்துள்ளது.