தனது கணவருடன் தேனிலவுக்குச் செல்லவுள்ள பெண் ஒருவர், தனது மாமியாரும் அதே விடுதியில் தங்கவுள்ளதை அறிந்து கடும் ஆத்திரமடைந்துள்ளார்.
சமூக வலைத்தளமொன்றில் இது தொடர்பாக தனது விசனத்தை வெளியிட்டுள்ள மேற்படி பெண், தேனிலவுத் தலத்தை மாற்றுவது நல்லதா என சமூக வலைத்தள பாவனையாளர்களிடம் ஆலோசனை கோரியுள்ளார்.
இப் பெண் தனது காதலரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இந்த ஜோடியினர் திருமணத்தின் பின்னர் தேனிலவு செல்வதற்காக விடுதியொன்றில் அறையை முன்பதிவு செய்திருந்தனர்.
ஆனால், இவர்கள் தேனிலவுக்குச் செல்லும் அதேகாலத்தில், அதே விடுதியில் மேற்படி மணமகளின் மாமியாரும் தங்குவதற்கு அறையொன்றை முன்பதிவு செய்துள்ளாராம்.
மாமியாரான பெண் தற்செயலாக அதே விடுதியில் முன்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
எனினும், தேனிலவின் போதும் மாமியாரும் அருகில் இருக்க வேண்டுமா என மணமகளான பெண் குறை கூறியுள்ளார்.
இந்நிலையில் தேனிலவுக்கான இடத்தை மாற்றுமாறு அவருக்கு பலர் ஆலோசனை கூறியுள்ளனர்.