AH1-N1 வைரஸ் தொற்று குறித்து சிகிச்சை அளிப்பதற்கு விசேட சிகிச்சை பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் AH1-N1 வைரஸ் தொட்டினால் பாதிக்கப்பட்ட 7 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்திசாலையின் பணிப்பாளர் டாக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்
விசேடமாக அத்தியாவசிய தேவைக்காக அன்றி கர்ப்பிணி பெண்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோர் கண்டி போதனா வைத்தியசாலையில் வருகை தருவதை தவிர்த்துக் கொல்லுமாறும் வைத்திசாலையின் பணிப்பாளர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்
தும்மல், தடிமன் மூக்கில் நீர் வடிதல், இருமல் போன்ற வற்றின்போது இவ்வைரஸ் ஏனையவர்களுக்கு பரவக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும் என்பதால் பிரத்தியேகமான கைக்குட்டை உபயோகிப்பதுடன் கைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
சுகாதார அமைச்சினால் தேவையான மருந்து வகைகளும் ஆலோசனைகளும் வைத்தியசாலைக்கு வழங்கப்படடுள்ளதாகவும் வைத்திசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.