யாழ்ப்பாண மாவட்டதில் நித்தம் 200மாடுகள் களவாடப்படுகின்றன. வீட்டில் கட்டி வைத்து இருக்கின்ற மாடுகளைகூட திருடி திறந்தவெளியில் வைத்து இறைச்சியாக்கின்றனர் என மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் ஏழத்தாற 200மாடுகள் களவாடப்படுகின்றன. வீட்டில் கட்டி வைத்து இருக்கின்ற மாடுகளைகூட திருடி திறந்தவெளியில் வைத்து இறைச்சியாக்கின்றனர். பின்னர் அவ் மாடுகளின் கழிவுகளை அங்கேயே விசிறிவிட்டுச் செல்கின்றனர்.
ஆட்டோக்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் இறைச்சியை கொள்வனவு செய்து சுன்னாகம், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாகம், சங்கானை போன்ற சனநடமாட்டம் அதிகமுள்ள சந்தைகளில் விற்கிறார்கள்.
இதில் முக்கியமாக செயற்பட்டுவரும் இரு நபர்கள் பற்றிய விபரம் என்னிடம் உள்ளது. மாடுகள்களவாடப்படுவது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளோம்.
புங்குடுதீவு, காரைநகர், வன்னியில் இருந்து மாடுகளை திருட்டு தனமாக கொண்டுவந்து இறைச்சியாக்கின்றனர்.
அண்மையில் சாவகச்சேரியில் இருந்து கிளிநொச்சிக்கு மாடுகளை கடத்திவந்த நபர்களை பொலிஸார் பிடித்து நீதிமன்றத்திடம் ஒப்படைத்திருந்தனர்.
சாவகச்சேரியில் உள்ள அறுகுவெளி என்ற பிரதேசத்தில் நேற்றய தினமும் மாடுகளை வெட்டி இருக்கிறார்கள். நாவற்குழியில் 12 மாடுகள் ஒரே இடத்தில் வைத்து வெட்டப்பட்டுள்ளது. அங்கேயே அவற்றின் கொம்புகள் தோல் மற்றும் கழிவுகளை புதைத்துள்ளனர். இது தொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்திலும் பல முறை முறையிட்டிருந்தோம் ஆயினும் எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்றே 12மாடுகளும் கொல்லப்பட்டன ஆனால் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. பட்டிப் பொங்கலுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காது விட்டால் 15 ம் திகதி காலையில் சாவகச்சேரி காவல் நிலையம் முன்பு உண்ணாவிரதம் இருப்போம் என பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்