பிரான்ஸ் நாட்டின் பாரீஸிலிருந்து கடந்தாண்டு மே மாதம் Egypt A320 ரக பயணிகள் விமானம் எகிப்தின் Cairo நகரை நோக்கி போய் கொண்டிருந்தது.
அப்போது திடீரென தீப்பற்றி கொண்ட விமானம் Mediterranean கடலில் முழ்கி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 66 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
இந்த விபத்துக்கு காரணம் விமானி பயன்படுத்திய ஐபோன் தான் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விமானப்படை அதிகாரிகள் CCTV கமெரா மூலம் ஆராய்ந்ததில், விபத்து நடைபெறும் முன்னர் விமானத்தில் இருந்த விமானி லித்தியல் அயன் பேட்டரி கொண்ட ஐபோன் 6 மொடல் செல்போனை கட்டுப்பாட்டு அறையில் வைத்திருந்தார்.
எளிதில் தீப்பற்றி கொள்ளும் தன்மை வாய்ந்தது அந்த வகை பேட்டரி என கூறப்படுகிறது.
இதனால் தான் முதலில் தீப்பொறி உருவாகி பின்னர் அது பரவி விபத்துக்குள்ளாகிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த விடயத்தை ஐபோன் நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக எங்களை விமான அதிகாரிகள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஐபோன் ஆல் தான் விபத்து ஏற்ப்பட்டது என்பதற்கு சரியான ஆதாரம் ஏதும் இல்லை எனவும் கூறியுள்ளது.