இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை மூச்சுத் திணறலால் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அவருக்கு உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளதாக தேமுதிக கூறியுள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தெரிவித்துள்ளது.