அடுத்த 2 வாரங்களில் தமிழகத்தில் கொரோனா உச்சம் தொட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகின்றன. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொரோனா பரவலை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கணிதக் கோட்பாடுகள் மூலம் கணிக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விஞ்ஞானிகள் குழுவை அமைத்துள்ளது.
இந்த குழு வெளியிட்டுள்ள கணிப்பில், தமிழகத்தில் மே 29ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதிக்குள்ளும், அஸ்ஸாம் மாநிலத்தில் மே 21ஆம் தேதிக்குள் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல பஞ்சாப் மாநிலத்தில் மே 22ஆம் தேதிக்குள், இமாச்சல பிரதேசத்ல் மே 24ம் தேதிக்குள், மேகாலயாவில் மே 31ம் தேதிக்குள், திரிபுராவில் மே 27ம் தேதிக்குள் கொரோனா புதிய உச்சத்தை தொடும் என்று கணித்துள்ளது.