மேட்டுப்பாளையத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 1500 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இதுவரை 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரானோ பரவலை கட்டுபடுத்த தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகள் கடந்த 10 ஆம் தேதி முதல் கடுமையாக்கபட்டுள்ள நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேவையில்லாத காரணங்களுக்காக இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வெளியே சுற்றும் நபர்களை பிடித்து அபராதம் விதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 10,மணிக்கு மேல் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் காவல்துறை துனை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் காவல் ஆந்வாளர் சிவகுமார், உதவி ஆய்வாளர்கள் வெங்கடேஸ், இளவேந்தன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் பி்ரபாகரன், கிருஷ்டோபர், சுரேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விதிமுறைகளை மீறி வெளியே சாலைகளில் வாகனங்களில் சுற்றியவர்களை பிடித்து விசாரித்து அபராதம் விதித்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து காவல்நிலையம் எடுத்து சென்றனர்.
இது குறித்து பேசிய மேட்டுப்பாளையம் காவல்துனை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வெளியே சுற்றியவர்கள் மீது இதுவரை 1500 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதுடன் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாகவும் அபராதமாக 25 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் விதிகளை மீறி வருபவர்கள் தங்களை திருத்திகொள்ளாவிட்டால் மேலும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என அவர் எச்சரித்து வாகனங்களை விடுவித்தார்.